Editorial / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறுத் தின தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைகளை தீர்த்தமை குறித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
2019 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து பிரதமரின் பங்கேற்புடன் அலரி மாளிகையில் நேற்று (16) கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலின் நிறைவிலேயே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடுவபிடிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 24 வீடுகள் திட்டத்தின் பணிகள் இதுவரை நிறைவடைந்த இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்து விரைவில் நிறைவுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்திற்கு பிரதமர் இதன்போது அறிவுறுத்தினார்.
மேலும், காணி உரிமை கொண்டுள்ளவர்களுக்காக மேலும் 5 வீடுகள் கடுபிடிய பிரதேசத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளது.
தாக்குதலில் பாதிக்கப்பட்டு கொழும்பை அணிமித்த பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் 33 குடும்பங்களுக்காக, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடப்பட்ட வீட்டுத் திட்டத்திலிருந்து 33 வீடுகளை ஒதுக்கித் தருமாறு பிரதமர் இதன்போது தகவல் வழங்கினார்.
இம்மக்களுக்கு மேலதிகமாக பதுளை, கண்டி உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள தாக்குதலினால் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களுக்காக அந்தந்த பிரதேசங்களில் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பது தொடர்பில் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது.
தற்போது நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள கடுபிடிய அறநெறி பாடசாலையை 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகையை செலவிட்டு நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்தல், தாக்குதலில் சேதமடைந்த கொச்சிகடை தேவாலயத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி கடற்படைக்கு ஒதுக்கீடுகளை மேற்கொண்டு நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கும் பிரதமர் இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கடந்த அரசாங்கம் கொச்சிகடை தேவாலயத்தை ஒரு புதிய வடிவமைப்பில் நிர்மாணித்து தருவதாக குறிப்பிட்ட போதிலும், அந்தவகையில் நிறைவுசெய்யப்படாமை குறித்த சந்திப்பின் போது வெளிப்படுத்தப்பட்டது.
கடந்த அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதை மாத்திரமே செய்தது. ஆனால், நாம் உண்மையாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார்.
கலந்துரையாடலின் நிறைவில் அங்கு கருத்து தெரிவித்த பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் குறிப்பிட்டதாவது,
பிரதமர் அவர்களே! நான் உங்களுக்கும் அரசாங்கத்துக்கும் தனிப்பிட்ட ரீதியில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுத்து, அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முயற்சிக்கும் இந்த வேலைத்திட்டத்திற்கு எமக்கு வழங்கிய ஆதரவு தொடர்பில், விசேடமாக இந்த விடயத்தில் தலையீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டமைக்காக நான் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
'எமது மக்கள் பாதிக்கப்பட்டமையினாலேயே நாம் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றோம். எதிர்காலத்தில் அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாத பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு உங்களது அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் தலையீட்டுடன் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என நாம் நம்புகின்றோம். அது குறித்து நாம் பிரதமர் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம்' என்றார்.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026