Freelancer / 2025 மே 24 , மு.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் ஏற்படவில்லை என மனமுடைந்த தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சங்கானை வைத்தியசாலை வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த ஐயாத்துரை கிருஷ்ணமூர்த்தி (வயது 63) என்ற தந்தையே உயிரிழந்துள்ளார்.
பட்டதாரிகளான இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் நடைபெறவில்லை என மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று (23) வீட்டில் தூக்கி தொங்கி உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)
16 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
1 hours ago