2026 மே 09, சனிக்கிழமை

dd

புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது

Nirosh   / 2021 மே 13 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறையில் பெய்துவரும் கடும மழைக் காரணமாக அங்குள்ள 7 பிரதேசசெயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பிரதேசங்களுக்கு வௌ்ளப்பெருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

புலத்சிங்கள, பாலிந்த நுவர, அகலவத்த, வலல்லாவிட்ட, இங்கிரிய, மதுகம, தொடங்கொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை நில்வலா, ஜின், களுகங்கை ஆகியவற்றின் நீர்மட்டங்கள் அதிகரித்துள்ளதால், புளத்சிங்கள, பாலிந்த நுவர, மீல்லெனிய, ஹோரன, தொடங்கொட ஆகிய பிரதேசங்களில் வௌ்ளப்பெருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குத் தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .