Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையில் புதிய மாற்றங்களுடன் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ஆறு தடவைகள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற சுதந்திக்கட்சியின் குழுவினரில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதனபடி, தயாசிறி ஜயசேகர, லசந்த அலகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர்.
முன்னதாக, சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago