2026 மே 02, சனிக்கிழமை

புதையல் தோண்டிய இருவர் கைது

J.A. George   / 2020 டிசெம்பர் 22 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எட்டியாந்தோட்டை பகுதியில் புதையல் தோண்டிய இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெரலுகொல்லவத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும்  பூஜைப்பொருட்களும் சந்தேக நபர்களிடம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த 21 வயதான இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  அவர்களை ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .