2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

புதையல் தோண்டிய தேரர் கைது

Janu   / 2026 ஜனவரி 11 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் உள்ள விகாரையொன்றைச் சேர்ந்த தேரர் ஒருவர் தர்ம போதனை மண்டபத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விகாரையைச் சேர்ந்த 47 வயதுடைய தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

119 எண் ஊடாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு செல்லும் போது  சந்தேக நபரான தேரர் தனியாகவே 04 அடி ஆழம் வரை தோண்டியிருந்ததாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X