Editorial / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரிகர் தலமாக சபரிமலை வழிபாட்டுத் தலத்தைப் பிரகடனப்படுத்தல் மற்றும் வசதிகளை வழங்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தியாவின் கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு இலங்கையின் இந்து பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 01 ஆம் தொடக்கம் அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சென்று தரிசிக்கின்றனர். இது நீண்டகாலமாக இடம்பெற்று வருகிறது.
தற்போது ஆண்டுதோறும் 15,000 இற்கும் அதிகமான இலங்கையின் இந்து பக்தர்கள் கலந்து கொள்கின்ற தலயாத்திரை மையமாகவும் அமைந்துள்ளது.
அதற்கமைய, இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு இலங்கை இந்து யாத்திரிகர்களால் மேற்கொள்ளப்படுகின்ற வழிபாட்டு தரிசிப்பானது, இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித தலயாத்திரையாகப் பிரகடனப்படுத்துவதற்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025