Nirosh / 2021 மார்ச் 10 , பி.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
புர்கா, அரச கல்வி கொள்கையைப் பின்பற்றாத மதராஸாக்கள் விரைவில் தடை செய்யப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் இன்று (10) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், 1-13 வரையிலான இஸ்லாமியப் பாடப் புத்தகங்களில் ஏனைய மதத்தினருக்கு எதிரானக் கருத்துகள் சூட்சமமான முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமெனவும், தாக்குதலோடு தொடர்புடையவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago