R.Maheshwary / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு- புறக்கோட்டை 4ஆம் குறுக்கு வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பணிபுரியும் நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு நேற்று முன்தினம் செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலமே தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தனியுடன் தொடர்புடைய ஒருவர், இந்த வர்த்தக நிலையத்தில் இருந்தமையால், அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போது, தொற்று உறுதியாகியுள்ளதாக, கொழும்பு நகர சபையின் தொற்று நோய் பிரிவின் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்த 35 பேரை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago