Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் tabzumab தடுப்பூசி உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் 20 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கான தொடர் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு ,கண்டி , கராப்பிட்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பொது வைத்தியசாலைகள் மற்றும் மஹரகம அபெக்ஷா வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் குறித்த tabzumab தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1000 மார்பக புற்றுநோய் தடுப்பூசிகளை பெறுவதற்கு கொள்வனவு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சுமார் 500 தடுப்பூசிகள் பெறப்பட்டு வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர்கள் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.
புற்று நோயாளர்களுக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்க வேண்டியுள்ள போதிலும், இந்த மருந்துகள் இல்லாததால் நோயாளர் பராமரிப்பு சேவைகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹரகம வைத்தியசாலையில் வருடாந்தம் சுமார் 3,000 புற்று நோயாளர்கள் சிகிச்சைக்காக வருவதாகவும், நாளாந்தம் சுமார் 1,000 நோயாளர்கள் உள்நோயாளிகளாகவும் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
10 minute ago
10 minute ago
22 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
10 minute ago
22 minute ago
36 minute ago