Freelancer / 2022 மார்ச் 01 , பி.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நிலவும் தற்போதைய நெருக்கடியானது விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விட ஆபத்தானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் 4 நாட்களுக்கு மட்டுமே டீசல் கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது 22,000 மெற்றிக் தொன் டீசல் இருப்பதாகவும், ஒரு தொகுதி டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாளை (02) மாலை வரவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வழமைக்கு மாறாக மக்கள் அதிகளவு எரிபொருளை பயன்படுத்துவதால் நாட்டில் எரிபொருளுக்கான வரிசைகள் உருவாகியுள்ளதாகவும் இதனால் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 5,000 மெற்றிக் தொன் டீசல் விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அந்தத் தொகை எதிர்காலத்தில் 3,000 மெற்றிக் தொன்களாக மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago