2025 மே 03, சனிக்கிழமை

பூஜித்தவிடம் இன்றும் வாக்குமூலம்; வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2019 ஜூலை 22 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் இன்றைய தினமும் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். 

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலையாகிய போது, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இருவருக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குறித்த வழக்கினை ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் இவர்கள் இருவரும் கடந்த 03ம் திகதி கைதுசெய்யபட்டனர்.

பின்னர், கடந்த 9ஆம் திகதி இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X