Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 13 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நேற்று (12) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல பதவி வகித்த 21 மாத காலத்தில் ரமித் ரம்புக்வெல்ல 27 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை ஈட்டியுள்ள நிலையில், அதனை ஈட்டிய விதம் குறித்த தகவலை வௌிப்படுத்த தவறியமைக்காகவே அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு ஈட்டப்பட்ட சொத்துக்களில் சொகுசு வீடு மற்றும் ஜீப் ரக வாகனம் உள்ளிட்ட மேலும் பல சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.
கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராகவும் ரமித் ரம்புக்வெல்ல பணியாற்றியிருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவியின் பெயரில் வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்புத்தொகைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் வெளிப்படுத்தியுள்ளது. R
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago