2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

வாகனத்தை ஒப்படைத்தார் பிரேமதாசவின் மனைவி

Freelancer   / 2025 செப்டெம்பர் 13 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச,  அரசாங்கத்தினால் தனக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் கடந்த புதன்கிழமை (10) பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட வாகனத்தை மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச மீண்டும் அரசாங்கத்திடமே ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .