2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பெருந்தொகையான கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். கிருஷ்ணா 

பெருந்தொகையான கழிவுத் தேயிலையுடன் இருவர் இன்று (14)  மஸ்கெலியா விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ லொய்னோன் தோட்டப் பகுதியில் இயங்கும் தேயிலைத் தொழிற்சாலையொன்றில் இருந்து அனுமதி பத்திரமின்றி கழிவுத் தேயிலைகளைக்  கொண்டு சென்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போதே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கழிவுத் தேயிலையையும் அதனை ஏற்றிச்சென்ற லொறியையும்  பொகவந்தலாவ பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X