2025 டிசெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பேச்சுவார்த்தைகள் வெற்றி - நிதியமைச்சு அறிவிப்பு

Freelancer   / 2024 ஒக்டோபர் 05 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கடன்வழங்குநர் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக நிதியமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஜூன் மாதம் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனும் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியுடனும் இணக்கம் காணப்பட்ட விடயங்களும், உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கையில் அடங்கியுள்ள விடயங்களும், சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளுக்கு அமைவானது என்பதனை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ள திட்டங்களுடன் தொடர்புடைய கடன் இலக்குகள், இணக்கப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் என்பன ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கு அமைவாக, சர்வதேச இறையாண்மை முறிகளை மறுசீரமைப்பதற்கும் அனுமதி கிடைத்துள்ளதாக நிதியமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X