Freelancer / 2025 ஜூன் 23 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷஷ்கியன் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, போரின் தீவிரத்தைக் குறைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வந்த நிலையில், இன்று திடீரென அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபருடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, சமீபத்திய பதற்றங்கள் குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நரேந்திர மோடி, நீண்டகால பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு போரின் தீவிரத்தை குறைப்பது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், "ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷஷ்கியனுடன் பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதித்தோம். சமீபத்திய மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினேன். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கும், நிலைமையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், உடனடியாக போரின் தீவிரத்தைக் குறைத்து, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வுக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்தினேன்." என தெரிவித்துள்ளார். (a)
5 minute ago
9 minute ago
35 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
35 minute ago
3 hours ago