2025 மே 01, வியாழக்கிழமை

“பேச்சு இடைநிறுத்தம்: தமிழரசு தனிவழி”

Editorial   / 2025 மார்ச் 10 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்  உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டியிடுகின்றது எனவும்  எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என  தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்..சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களின்  கலந்துரையாடல் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பகுதியில் சனிக்கிழமை(08) இரவு பொத்துவில் தொகுதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான   .கோடீஸ்வரன்  ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன் போது  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளருமான எம். . சுமந்திரன்   கல்முனைத் தொகுதி தலைவர் .நிதான்சன்  சம்மாந்துறை தொகுதியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  .கலையரசன் மற்றும் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்களும் கலந்து கொண்டு தீர்மானங்கள் எட்டப்பட்டன.

 
இதன்போது இக்கூட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டதுடன்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளும் கைப்பற்றப்படல் வேண்டும் பெண்கள் பிரதிநிதித்துவம் இளைஞர்களுக்கு தேர்தலில் பங்கேற்க  வாய்ப்பு வழங்குதல் உட்பட   இலங்கை தமிழரசுக் கட்சியானது இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .