2025 ஜூலை 16, புதன்கிழமை

பேருவளையில் இரண்டு கிராமங்கள் முடக்கம்

Editorial   / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை பின்னவல, சீனக் கோட்டை ஆகிய இரண்டு கிராமங்களும் முடக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த இரண்டு கிராமங்களில் இருந்தும் கொரோனா வைரஸ் நோயாளர்கள் 16 பேர் இனங்காணப்பட்டதையடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பண்டாரகமையிலுள்ள அத்துலுகம கிராமம், தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அப்பகுதிகளுக்கான ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .