Editorial / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
பேருவளை பகுதியிலிருந்து புணானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அனுப்பப்பட்ட 219 பேரில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று இன்று (22) உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பேருவளை பிரதேச செயலாளர் சத்துர மல்ராஜ் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் 17 பேர், கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் இனங்காணப்பட்டனரென அவர் தெரிவித்தார்.
பேருவளை பகுதியிலுள்ள 10 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 47 பேர், இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, களுத்துறை மாவட்டத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
24 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
40 minute ago