Editorial / 2019 ஜூலை 20 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
மலையகத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக, தலவாக்கலை - பேர்ஹாம் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், 09 குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை - பேர்ஹாம் தோட்டத்தில், நேற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு இன்றும் மரம் முறிந்து விழுந்து வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
வெள்ளத்தால் 9 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், உயிராபத்துகள் எதுவும் இல்லையெனவும் சில பொருள்கள் மட்டும் சேதமாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக, இக்குடியிருப்பில் வசித்து வந்த 44 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் தோட்ட சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 44 பேரில் 9 ஆண்கள், 12 பெண்கள், 23 சிறுவர்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago