Nirosh / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆ.ரமேஸ்)
பொகவந்தலாவை பிரதேசத்தில் முதலாவது கொரோனா வைரஸ் மரணம் இன்று (04) பதிவாகியுள்ளது.
பொகவந்தலாவை செபல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனையில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொலன்னறுவையில் உள்ள கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று (04) உயிரிழந்துள்ளார்.
மூடப்பட்டிருக்கும் பொகவந்தலாவை வைத்தியசாலையை தொடர்ந்து மூடிவைப்பதற்கும் சுகாதாரத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
19 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
29 minute ago