Editorial / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவிலிருந்து தம்புளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறி ஏற்றிச் சென்ற நபரொருவரை கொலைச் செய்துவிட்டு அவர் வசமிருந்த பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தம்புளை பொலிஸார் குறித்த விசாரணையை இன்று (21) ஆரம்பித்துள்ளனர்.
பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் வெட்டுக்காயங்களுடன் நபரொருவரின் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த நபர் பொருளதார மத்திய நிலையத்துக்குள் உள்ள கடைகளுக்குள் சுற்றித்திரியும் காணொலிகள் சீ.சீ.டி.விகளில் பதிவாகியுள்ள நிலையில் அவற்றை மையமாக கொண்டே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேற்படி விசாரணைகளுக்கமைய நுவரெலியா - ராகலை பகுதியை சேர்ந்த உக்குபண்டா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், இரவு ஒருமணியளவில் பொருளதார மத்திய நிலையத்துக்கு கரட் ஏற்றிய லொறியொன்றில் குறித்த நபர் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago