Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் IDH வைத்தியசாலைக்கு இணையான பிரிவொன்றை பொலன்னறுவையில் ஸ்தாபித்துள்ளதாக இராணுவ தளபதி, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளானோரை கண்காணிப்பதற்கான குறித்த பிரிவுக்கு இன்று (17) மாலை முதல் நோயாளர்களை அங்கு அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என இராணுவத்தளபதி கூறியுள்ளார்.
IDH வைத்தியசாலையில் மாத்திரமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் உள்ளனர்.
ஆனால், மட்டக்களப்பு, பொலன்னறுவையிலுள்ள கண்காணிப்பு மத்திய நிலையங்களிலேயே அதிக நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதால், IDH போன்றதொரு பிரிவை பொலன்னறுவையில் ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவின் ஆலோசனையுடன், பொலன்னறுவை வைத்தியசாலையின் ஆலோசனையின் அடிப்படையிலும் இன்று மாலை முதல் அவ்வாறான நோயாளர்களை அங்கு அனுமதிக்க முடியும் எனவும் இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago