Editorial / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறிய பிக்குகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அஸ்கிரிய மகாநாயக்க தேரரான வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் , பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸ் மா அதிபருக்கு இன்று (12) அனுப்பியுள்ள கடிதமொன்றில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
சிறிய பிக்குகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து, ஹொரவபொத்தானை பொலிஸாரால் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு நேற்று (11) கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதவிய நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.


9 minute ago
18 minute ago
38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
38 minute ago
3 hours ago