2026 மே 09, சனிக்கிழமை

போட்சிட்டி மனுக்கள் நாளை வியாக்கியானம்

Editorial   / 2021 மே 03 , மு.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், அதன் வியாக்கியானத்தை சபாநாயகர் காரியாலயத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.

சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதனை பிரதமர் நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர் குழாம், ஆராய்ந்தது. அந்த சட்டமூலம், அரசியலமைப்புக்கு இயைபாய் இருக்கிறதா அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான வியாக்கியானத்தையே அனுப்பிவைத்துள்ளது.

மே மாதத்தில் இரண்டாவது வாராத்துக்கான சபையமர்வு, 4 மற்றும் 5ஆம் திகதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதில், செவ்வாய்க்கிழமை சபையமர்வின் போது, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே​வர்தன, சபைக்கு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .