Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Freelancer / 2022 செப்டெம்பர் 22 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகின்ற பட்சத்தில் இவ்வருடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று யாழ்.போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுவதால் உயிரிழப்புக்கள் சம்பவிப்பது அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
வெளிப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில், யாழ்.சிறைச்சாலையில் 10 பெண்கள் உட்பட 491 பேர் போதைப்பொருள் பாவனையாளர்களாக இருப்பதாகவும் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் 13 பெண்கள் உட்பட 854 பேர் போதைப்பொருள் பாவனையாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் இதுவரை 10 பேர் போதைப் பாவனையால் உயிரிழந்துள்ளனர் எனவும் யாழ்.போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
41 minute ago
1 hours ago