Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஒக்டோபர் 21 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம வாவியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (20) அன்று இடம் பெற்றுள்ளது.
பொல்கஹவெல மற்றும் பூஜாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் மேலும் இருவருடன் மது அருந்திவிட்டு போதையில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்தள்ளது.
உயிரிழந்த இருவரின் சடலங்கள் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
05 May 2025