Editorial / 2024 மே 07 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஔவை நகர் பகுதியில் வைத்து பிரதேச ஊடகவியலாளர் ஒருவரை போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (05)மாலை இடம் பெற்றுள்ளது. 42 வயதான பிரதேச ஊடகவியலாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார.
கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது இவரிடமிருந்து 30போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையில் உள்ள மருந்தகம் ஒன்றில் கொள்வனவு செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரனை மூலமாக தெரியவருகிறது. அத்துடன் ஒரு தொகை போக்குவரத்து ஆவணங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதேச ஊடகவியலாளர் அரச, தனியார் ஊடகங்களில் பிரதேச செய்தியாளராகவும் கடமையாற்றி வருகிறார். கைது செய்யப்பட்ட நபரை மொறவெவ நீதிமன்ற நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை (06) ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மொறவெவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
2 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Nov 2025