Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 30 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ப. பிறின்சியா டிக்சி
இலங்கையிலுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 10,973 ஆகும். இதில், ஆரம்பப் பாடசாலைகளின் எண்ணிக்கை 3,559 ஆகும் என்று முகாமைத்துவப் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவு மேற்கொண்ட ஆய்வறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் முதல் பிரதியை, முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அஜந்த எஸ். தர்மசிறியினால் வெளியிடப்பட, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த வைபவம், முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (29) மாலை 3 மணிக்கு நடைபெற்றது.
குறித்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையிலுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 10,973 ஆகும். இதில், தனியார் மற்றும் விசேட பாடசாலைகள் 103 உள்ளன. ஆரம்பப் பாடசாலைகளின் எண்ணிக்கை 3,559 ஆகும்.
இந்தப் பாடசாலைகளில் எல்லாம் மொத்தமாக 43 இலட்சம் மாணவர்கள் பயிலுகின்றனர். 249,024 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago