2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாடல் பாடிய பாடகருக்கு பிணை

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடல் பாடிய பாடகர் ஒருவர் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில், கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் இன்று புதன்கிழமை விடுலை செய்யப்பட்டுள்ளார்.

பாடகர் எம்.எஸ் பெர்ணான்டோ பாடிய 'வெற்று தகர பேணியான மாய வாழ்க்கை' என்ற பாடலை அவரது அனுமதியின்றி பாடி, நிதி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டப்பட்ட பாடகர் எம்.ஜி. தனுஷ்க என்பவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாடகர் எம்.எஸ்.பெர்ணான்டோவின் மகன் சரத் பெர்ணான்டோ,  இரகசிய பொலிஸின் வர்த்தக குற்றப்பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் நீதிமன்றத்தில் ஆஜரான பாடகரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .