2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

போட் சஹாரவிடமிருந்தது ஜெயராஜின் துப்பாக்கியாகும்

Thipaan   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகக் கோஷ்டித் தலைவர்களில் ஒருவரான போட் சஹார என்றழைக்கப்படும் சுமித் தயாரத்ன பயன்படுத்தியது, முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த செக்கோஸ்லாவியாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியாகும் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சரின் பாதுகாப்புக்காக விநியோகிக்கப்பட்டிருந்த எம்.எம்.9 வகையைச் சேர்ந்த துப்பாக்கியே மீட்கப்பட்டுள்ளது. தன்னை, பொலிஸார்

கைதுசெய்துவிடுவர் என்ற அச்சத்தில், முன்னாள் மனைவியின் கொக்கரல்ல வீட்டில் அவர் மறைந்திருந்துள்ளார்.

அவ்வீட்டை, பொலிஸார் கடந்த 21ஆம் திகதியன்று சுற்றிவளைத்தபோது, அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அங்கு கிடந்த துப்பாக்கியை மீட்ட பொலிஸார், அதன் இலக்கத்தை வைத்து பரிசீலனைக்கு உட்படுத்திய போதே மேற்கண்ட தகவல் வெளியானது.

கம்பஹா, வெலிவேரிய காந்தி விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதியன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே பலியானார். அவ்விடத்தில் கிடந்த துப்பாக்கியை மீட்ட யாரோ ஒருவர், போட் சஹாரவிடம் ஒப்படைத்திருக்கலாம் என்றும் அறியமுடிகின்றது.

இதேவேளை, மனிதப் படுகொலைகள் மற்றும் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டுவந்த சந்தேகநபரான போட் சஹார, தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதன் பின்னர், அவருடைய உதவியாளர்கள் என்று கூறப்படும் இருவரை ஆயுதங்களுடன், கட்டுநாயக்க வாதுவ பிரதேசத்தில் வைத்து கடந்த 24ஆம் திகதியன்று பொலிஸார் கைதுசெய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X