2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

போதைப்பொருள் வியாபாரத்தில் ‘பொலிஸாரும் அரசியல்வாதிகளும் பங்காளிகள்’

Gavitha   / 2016 நவம்பர் 07 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் பெரும்பாலானவர்களும் சில அரசியல்வாதிகளும், இந்நாட்டில் இடம்பெறும் மாபெரும் போதைப்பொருள் வர்த்தகத்தின் பங்காளர்களாகச் செயற்பட்டு வருகின்றனர் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.  

கம்பஹா பிரதேசத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, “போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், அதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .