2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

புதிய ஆண்டில் ஆடம்பர பஸ் சேவை

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 2016ஆம் ஆண்டில் ஆடம்பர பஸ் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. 

இத்திட்டம், அமைச்சின் 2016ஆம் ஆண்டுக்கான முன்மொழிவுத் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்தோடு, 80 சிறிய பஸ்கள் கொள்வனவு மற்றும் நாடு முழுவதும் பரவலாக பஸ் தரிப்பிடங்களை அபிவிருத்தி செய்தல், சகல சாலைகளுக்கும் பயணச்சீட்டு இயந்திரம் வழங்கல் மற்றும் அலுவலக வேலைகளை இலகுவாக்கும் மென்பொருட்களை அறிமுகம் செய்தல் ஆகிய பல செயற்திட்டங்களை அமுலாக்க அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X