2025 மே 22, வியாழக்கிழமை

பிரிவினையின்றிவாழ்கின்றனர்: ருவான்

Thipaan   / 2015 டிசெம்பர் 25 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு சமாதானத்தை முன்னெடுத்து, சகல இனங்களும் சமாதானத்துடன் வாழ வேண்டுமென கூறிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, முழு நாட்டு மக்களுமே பிரிவினையின்றி வாழ்கின்றனர் என்றும் தெரிவித்தார். இலங்கையில், முழுச் சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியாத, சமய நிகழ்வுகளைக் கொண்டாட முடியாத காலமொன்றிருந்தது. ஆயினும், இன்று நிலை மாறிவிட்டது.

'அரசாங்கம் என்ற வகையில், மக்களுக்குச் சாந்தியும் ஒற்றுமையும் மிக்க சூழலை நாம் ஏற்படுத்தியுள்ளோம்' எனக் கூறினார். கட்டுநேரிய, சென். செபஸ்தியன் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போதிய நிதி ஒதுக்கீட்டைச் செய்து, கல்வித் துறைக்குப் புத்துயிரூட்டுவதற்கான முயற்சியை அரசாங்கம் எடுத்துள்ளனெவும் விஜேவர்தன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X