2025 மே 22, வியாழக்கிழமை

பாலத்துக்கு அருகில் பாதணிகள்: தாய், சிறுவன் மாயம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை, மாநாம பாலத்துக்கு அருகில், பெண்ணின், கைப்பை, அலைப்பேசிகள் இரண்டு, பாதணிகள் இரண்டு ஜோடி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 11 மணியளவில் அந்த பாலத்துக்கு அருகாமையில் 35 பெண்ணொருவரும் 10 வயதான சிறுவனும்  வருகைதந்துள்ளனர் என்று தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பையிலிருந்து 7,100 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது என்றும், கிடைத்த தகவல்களுக்கு அமைய, இவ்விருவரும் இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எனினும், அவ்விருவர் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் இதுவரையிலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த பொலிஸார், நில்வளா கங்கையில், கடற்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X