2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

போலியான சுங்க அதிகாரிகள் நால்வர் கைது

Kanagaraj   / 2016 நவம்பர் 02 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

உதவி சுங்கப் பணிப்பாளர்கள் என்று தங்களை இனங்காட்டிக்கொண்டு, வெளிநாட்டு மதுபானங்களை (விஸ்கி) குறைந்த விலையில் பெற்றுத்தருவதாகக் கூறி, பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நால்வரை கைதுசெய்துள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு அறிவித்துள்ளது.

இராகமை, வத்தளை மற்றும் ஜா-எல ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட இந்த நால்வரும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்தே, 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உதவி சுங்கப் பணிப்பாளர்கள் என்று தங்களை இனங்காட்டிக்கொள்ளும் இவர்கள், அலைபேசி இலக்கங்களை சேகரித்து, அதனூடாக தொடர்புகளை ஏற்படுத்தி, குறைந்த விலையில் வெளிநாட்டு மதுபானங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி, அவர்களிடமிருந்து பணத்தைபெற்று அவர்களுக்கு மதுபானப் போத்தல்களை கொடுக்காது ஏமாற்றிவிட்டு தப்பிச்சென்று விடுகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹெரோய்ன் விற்பனையாளர்கள் என்று அறியமுடிகின்றது.
இந்நிலையில், சந்தேகநபர்கள் நால்வரும் தடுத்து வைக்கும் கட்டளையின் கீழ் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கொழும்பு குற்றப் பிரிவு அறிவித்துள்ளது.

இவ்வாறான மோசடிக்குள் சிக்கிக்கொண்டவர்கள் இருப்பார்களாயின், 071-8591727 / 011-2662323 / 071-8591735 /  011-2662311


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .