Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 10 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேலியகொட
துப்பாக்கியால் மிரட்டி பணம், சொத்துக்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவரைப் பொலிஸார், திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
அக்குரஸ்ஸ மாரம்ப பகுதியைச் சேர்ந்த 39வயதான சந்தேக நபரினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான காரொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடவத்தை
மோட்டார் சைக்கிள், அலைபேசி திருட்டுச்சம்பவங்களுடன் தேடப்பட்டு வந்த நபரொருவரைப் கடவத்தை பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
இவரிடமிருந்து 9 மோட்டார்சைக்கிள்கள், 20 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டள்ளன. இவர், கிரி-இப்பன்வௌ பகுதியைச் சேர்ந்த 39 வயதானவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவரை திங்கட்கிழமை(09) வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 23 திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கண்டி
பல கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரைப் கண்டிப் பொலிஸார், திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.
அவரிடமிருந்து எல்.சி.டி தொலைக்காட்சி-3, தையல் இயந்திரம்-1, கெசடி ரெகோடர்;-2, டீ.வீ.டி பிளேயர்-1, இரண்டு இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலி, இரண்டு இலட்சத்து 63 ஆயிரம் பெறுமதியான தங்கச் சங்கிலி 1, கமெரா 5, மோட்டார் சைக்கிளொன்றும் கப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
குறித்தநபர்கள் பொல்கொல்ல, இராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்த 37,24 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை கண்டி நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை(09) ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெரிவித்தார்.
வெலிகட
தங்க நகைச் கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடை சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கடந்த திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 5 தங்கச்சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன. இருவரும் தொடங்கொட, பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்;.
லுணுகம்வெகர
லுணுகம்வெகரப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி போரத் துப்பாக்கி வைத்திருந்த 57 வயதான ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் திங்கட்கிழமை (09) கைதுசெய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
1 hours ago