2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பொலிஸாரை தாக்கிய இளைஞர்களுக்கு பிணை

George   / 2016 டிசெம்பர் 04 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடமைக்குச் சென்று திரும்பிக்கொண்கொண்டிருந்த எம்பிலிபிட்டிய பொலிஸ் அதிகாரி அனில் பிரியன்த உள்ளி்ட்ட குழுவினர் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட 5 இளைஞர்கள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 5 இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவை, எம்பிலிபிட்டிய நீதவான் விதாரண, இன்று பிறப்பித்தார்.

சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் அதிகாரி உள்ளி்ட்டவர்களுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, அவர்கள் மீது தாக்குவதற்கு தயாரான போது, அதற்கு முன்னதாக சந்தேகநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் வாகனத்தில் வந்த பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட குழுவினர்,  சிவில் உடையில்  இருந்தால் அடையாளம் காணவில்லை என்றும் அவர்கள் யாரன்று தெரிந்தவுடன் உடனடியாக பொலிஸ் தலைமையகத்தில் சரணடைந்தாக, சந்தேகநபர்களின் சட்டத்தரணி, நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .