S.Renuka / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் சமையலறை எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாத அளவிற்கு கையிருப்பு உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் (Litro Gas) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், எரிவாயுவை கொள்வனவு செய்யும் விடயத்தில் பீதியடைய தேவையில்லையென குறித்த நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 17 மற்றும் 18ஆம் திகதிகளில் ஏற்கனவே 284,000 வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களை விநியோகத்திலுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை (19) முதல் எதிர்வரும் சனிக்கிழமை (21) வரை மேலும் 351000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
19 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago