Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகனின் விந்தணு குறைபாடு காரணமாக மருமகளை கர்ப்பிணியாக்க உறவினர்களுடன் சேர்ந்து மாமனார் பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் நவபுரா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 40 வயது பெண். இவருக்கும், இன்னொருவருக்கும் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.
திருமணம் ஆகி சில மாதங்கள் ஆனபோதும் அந்த பெண் கர்ப்பிணியாகவில்லை. இதனால் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். முதலில் குடும்பத்தினருக்கு பெண்ணின் மீது சந்தேகம் எழுந்தது.
அப்போது அந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதேவேளையில் அவரது கணவருக்கு தான் பிரச்சனை இருப்பது தெரியவந்தது. விந்தணு குறைபாட்டால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பதும், இதனால் அவர் அந்த பெண் கர்ப்பிணியாகவில்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவர்கள் ஆலோசனையின்படி அந்த பெண் ஐவிஎஃப் முறையில் கருத்தரிப்புக்கு தயாரானார். ஆனால் அது பலன் கொடுக்கவில்லை. மேலும் அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு அந்த பெண் மறுத்துவிட்டார். அதோடு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று அவர் கூறினார்.
இதில் மனவேதனை அடைந்த பெண் சம்பவம் பற்றி தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் அதனை கண்டுக்கெள்ளவில்லை. எங்கள் குடும்பத்துக்கு வாரிசு வேண்டும். இதனால் யாரிடமும் இந்த சம்பவம் பற்றி கூறக்கூடாது. மீறினால் ஆடைகள் இன்றி இருக்கும் போட்டோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என்று மிரட்டி உள்ளார். இதனால் அந்த பெண் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
இதனை பயன்படுத்தி அந்த பெண்ணை மாமானார் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் அந்த பெண் கர்ப்பமாகவில்லை. இதையடுத்து தனது உறவினர் ஒருவரை அழைத்து கடந்த 2024 டிசம்பம் மாதம் பலாத்காரம் செய்ய வைத்துள்ளனர். அதன்பிறகு அவரும் அந்த பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் அந்த பெண் கர்ப்பமானார். ஆனால் இந்த மாத தொடக்கத்தில் அந்த பெண்ணின் கரு கலைந்தது.
இந்நிலையில் தான் மீண்டும் அவர்கள் பெண்ணை பலாத்காரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்த அந்த பெண் சம்பவம் குறித்து நவபுரா பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பொலிஸார் அந்த பெண்ணின் கணவர், மாமனார், உறவினர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
22 minute ago
57 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
57 minute ago
4 hours ago
5 hours ago