Freelancer / 2026 பெப்ரவரி 07 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
வெடிப்பு நடந்த இடத்திலிருந்து மொத்தம் 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என உள்ளூர் பொலிஸார் ஒரு அறிக்கையில் உறுதிபடுத்தினர்.
அனர்த்தத்தில் மேலும் எட்டு பேர் காயமடைந்தனர் என வெடிப்பு நடந்த கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தின் உயர் அதிகாரி மணீஷ் குமார் தெரிவித்தார்.
வெடிப்பு நடந்த நேரத்தில் சுரங்கத்திற்குள் இருந்த தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இதனால் மேலும் பலர் சுருங்கத்தில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் டைனமைட் வெடிப்பால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் தடயவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர். (a)

24 minute ago
34 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
4 hours ago
5 hours ago