2026 மார்ச் 16, திங்கட்கிழமை

மகளுக்கு பாலியல் தொல்லை: தீர்ப்புக்கு முன் தந்தை செய்த செயல்

Editorial   / 2026 மார்ச் 16 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தனது சொந்த மகளையே பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் களுத்துறை மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அதன் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் சந்தேக நபரான தந்தை தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.  
 

59 வயதான குறித்த நபர், கடந்த ஒரு வருடமாக வாடகை அடிப்படையில் வசித்து வந்த அறையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து மார்ச் 14ஆம் திகதி காலை 8 மணியளவில் 119 அவசர பொலிஸ் பிரிவுக்குத் தகவல் வழங்கப்பட்டது.
 

வெலிப்பன்ன பொலிஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபரின் மனைவி சுமார் 10 வருடங்களுக்கு முன்னரே அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டமை தெரியவந்துள்ளது.
 

உயிரிழந்த நபர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று மரண விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டது. அதில், களுத்துறை மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் தனது தாய் (சந்தேகநபரின் தாய்) குற்றவாளி அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

வெளிப்பன்ன மரண விசாரணை அதிகாரி நிஹால் ஜயநெத்தி முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது. களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ நிபுணர் கே.எம்.டி.பி. குணதிலக்க வழங்கிய உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில், இது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட மரணம் என உறுதிப்படுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X