2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மகள் அநாதையாக்கிவிட்டார்: தாய் முறைப்பாடு

Gavitha   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மூத்த மகள், தன்னை அநாதையாக்கி விட்டதாக தெரிவித்து, 91 வயது தாயொருவர், பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

91 வயதுடைய குறித்த தாய், தனது சொத்துக்கள் அனைத்தையும் மூத்த மகளுக்கு எழுதி வைத்துள்ளார். சொத்துக்களை அவருக்கு எழுதி வைத்துவிட்டு, இறக்கும் வரை அவருடனேயே இருக்காலம் என்று எண்ணியே, அவர் சொத்துக்களை எழுதி வைத்ததாக தெரியவருகின்றது.

எனினும், தாயுடைய இந்தச் செயற்பாட்டால், அவருடைய மற்றைய பிள்ளைகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், மூத்த மகள், தாயை ஒரு முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு, பண்டாரகம, கிந்தெல்பிட்டி பகுதியிலுள்ள கடைசி மகளின் வீட்டு முற்றத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதன்பின்னரே, குறித்த தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மேலும், தாயை பார்த்துக்கொள்ளும் நிலையில் தான் இருக்கவில்லை என்று, கடைசி மகள் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .