2025 ஒக்டோபர் 11, சனிக்கிழமை

மகாவலி ஆற்றில் மிதந்த மாணவனின் சடலம்

Freelancer   / 2025 ஒக்டோபர் 10 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி - தென்னேகும்புர பாலம் அருகே காணாமல் போன இரண்டு மாணவர்களில் ஒருவரின் சடலம் மகாவலி ஆற்றில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட மாணவர் 14 வயதுடைய ஜெகதீஸ் என தெரியவந்துள்ளது. 

நேற்று (09) இரண்டு பாடசாலை மாணவர்கள் காணாமல் போனதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. 

கண்டி நகரில் இரு பாடாலைகளில் கல்வி கற்று வந்த ஜெகதீஷ் மற்றும் எம். மிலான் ஆகியோர் நேற்று மாலை வளர்ப்பு மீன்களை கொள்வனவு செய்வதாக கூறி வீடுகளில் இருந்து திகன பகுதிக்கு சென்றுள்ளனர். 

இதற்கிடையில், குறித்த இருவரும் மகாவலி ஆற்றில் இறங்கி பாறைக் கரையில் இருந்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.  

மேலும் பலர் இரண்டு மாணவர்களும் மகாவலி ஆற்றில் இறங்குவதைக் கண்டதாகவும்  தெரிவித்துள்ளனர். 

கண்டி தலைமையக பொலிஸார் மற்றும் பலகொல்ல பொலிஸாரும் இணைந்து காணாமல் போன மாணவர்களைத் தேடுவதற்காக கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டதுடன், மகாவலி ஆற்றில் தேடுவதற்காக கடற்படையின் சுழியோடிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போதே காணாமல் போயிருந்த ஒரு மாணவன் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X