2025 ஒக்டோபர் 10, வெள்ளிக்கிழமை

10 பேரின் உயிரைப் பறித்த எலிக்காய்ச்சல்

Freelancer   / 2025 ஒக்டோபர் 10 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் மாவட்டத்தில் எலிக்காய்சல் நோயினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதேச சுகாதார சேவை அநுராதபுரம் அலுவலக தொற்றுநோய் பிரிவின் வைத்திய அதிகாரி தேஜன சோமதிலக்க தெரிவித்தார்.

2024 மற்றும் 2025 ஆண்டுகளில் அநுராதபுரம் மாவட்டத்தில் வருடந்தோறும் 300 க்கும் அதிகமான எலிக்காய்சல் நோயாளிகள் பதிவாகின்றனர்.

அதிகமான நோயாளர்கள் அநுராதபுரம் மாவட்டத்தின் கெப்பித்திகொள்ளாவ பிரதேச செயலாளர் பிரிவிலேயே பதிவாகியுள்ளனர்.

இதில், நாச்யாதுவ, நொச்சியாகம, விளச்சிய, திறப்பனை, இபலோகம, தலாவ, தம்புத்தேகம, ராஜாங்கனை, மதவாச்சி  உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே எலிக்காய்சல் நோயினால் பத்து பேர் உயிரிழந்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X