Editorial / 2019 ஜூலை 27 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்., வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதியில், தனியார் காணியை அபகரித்து பௌத்த மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து, நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வலி. வடக்கு பிரதேசசபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் வடக்கு- தையிட்டி கிராமத்தில், 1946ஆம் ஆண்டே பௌத்த விகாரை அமைந்திருந்தது. குறித்த பௌத்த விகாரைக்காக 20 பரப்பு காணியும் காணப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக 5 தனியாருக்கு சொந்தமான காணி அபகரிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேற்படி விகாரை அமைப்பு தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில்,
வலி. வடக்கு கிராமங்களில் மிக நீண்டகாலத்திற்கு முன்னர் பேக்கரிகள், சீமெந்து தொழிற்சாலைகளில் பணியாற்றிய பௌத்தர்கள் வழிபாடுகளை நடத்துவதற்காக சுமார் 20 பரப்பு காணியில், 1946ஆம் ஆண்டு காலப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு பௌத்த விகாரை அமைக்கப்பட்டிருந்த இடத்தில், பௌத்த விகாரைக்கு சொந்தமான காணியில் விகாரை கட்டப்படுவதில் எமக்கு ஆட்சேபனைகள் எதுவும் இல்லை. ஆனால் பௌத்தர்களே வாழாத பகுதியில் மக்களுக்கு சொந்தமான காணியை அபகரித்து மகாபோதி அமைப்பது பொருத்தமற்ற காரியம்.
இந்நிலையில் தனியார் காணியில் மகாபோதி அமைப்பதற்கு பௌத்த பிக்கு ஒருவர் வலி,வடக்கு பிரதேசசபையிடம் அனுமதி கோரியுள்ளார். ஆனாலும் நாம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை.
ஆகையால், அனுமதியில்லாமலும் அதே நேரம் தனியார் காணியை ஆக்கிரமித்தும் மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.
21 minute ago
41 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
48 minute ago
2 hours ago