Freelancer / 2026 மே 01 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உழைக்கும் மக்கள், நாடு பொருளாதார ரீதியாகப் பல வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் ஒரு தீர்மானமிக்க தருணத்தில் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மே தினச் செய்தியில் ஜனாதிபதியின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டில், 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக்குறைந்த வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியுள்ளதுடன், 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் அதிகூடிய அரச வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி வருமானம் 17 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது என்றும் அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, டித்வா சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், நாட்டின் அணிசேரா வெளியுறவுக் கொள்கை மூலம் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,750 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
2016 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் பணியில் இணைந்த அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதிய உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பொருளாதாரம், 'கிளீன் ஸ்ரீலங்கா' மற்றும் 'சமூக சக்தி' போன்ற திட்டங்கள் மூலம் மனித வளத்தையும் உற்பத்தியையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வளமான நாடு - அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் கூட்டு முயற்சியில், நாட்டின் முதன்மை சக்தியான உழைக்கும் மக்கள் மனசாட்சிக்கு இணங்க இணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். (a)
33 minute ago
42 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
42 minute ago
51 minute ago
1 hours ago