Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஜூன் 03 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறு தெய்வங்கள், குலதெய்வங்களின் வழிபாடுகள் என்றால், பலரும் பய பக்தியுடன் கையாள்வர், அதிலும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதை ஒருபோதும் பிற்போடவே மாட்டார்கள்.
பொதுவாகவே, இரத்த பலி கொடுக்கும் வகையிலேயே நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படும். அதற்காக, ஆடு அல்லது சேவல் நேர்ந்துவிடப்படும். ஓரிரு வருடங்களுக்குப் பின்னர், அதனை வெட்டி பூஜைகளைச் செய்வார்கள்,
தேவையேற்படின் சாமியின் பெயரில் சூடான பானங்களையும் தங்களுக்கு அன்றையதினம் படைத்துக்கொள்வர். கோவில் திடலில் ஆக்கப்பட்ட இறைச்சி கறிகளை வீட்டுக்கு கொண்டுவந்தால் நேர்த்திக்கடன் நிறைவேறாது என்பதே ஐதீகம். அதனால், அவ்விடத்திலேயே வழித்து சாப்பிட்டுவிடுவர்.
கொரோனா காலம் என்பதால், இவ்வாறான நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவது பகிரங்கமாக இடம்பெறாது. எனினும், வீட்டுத் தோட்டங்கள் அல்லது மலைகளில் இருக்கும் மாடசாமிகள் அவ்வப்போது இரத்தத்தை ருசித்துகொண்டுதான் இருக்கின்றன.
அவ்வாறான சம்பவமொன்றுதான், நோர்வூட் பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் இடம்பெற்றுள்ளது. பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அழைத்துச் சென்றோரின் எண்ணிக்கையை மூன்றாக மட்டுப்படுத்திகொண்டனர் என்றுதான் தகவல்.
ஆடு அல்ல: சேவலை அறுக்கப்பட்டுள்ளது. வந்திருந்த பூசாரியும் பூஜைகளை முடித்துவிட்டு பறந்துவிட்டார். ஆனால், கொரோனாவின் பயத்தால், அந்த சேவலை, செனிடைசரில் நன்றாக நீராடியதன் பின்னரே, கோழியை அறுத்து, சமைத்துள்ளனர்.
பொதுவாக இவ்வாறான சந்தர்ப்பங்களில், மஞ்சள் தண்ணீர் தெளித்துதான் பலிபூஜைகள் செய்யப்படும். ஆனால், கொரோனா எல்லாத்தையும் மாற்றிவிட்டது என்பதுதான் புதினமாய் இருகிறது. நோர்வூட் பிரதேச சபைக்குள் சென்றிருக்கும் ஒருவர் வாழும் ஊரிலேயே செனிட்டர் பூஜை இடம்பெற்றுள்ளது.
5 minute ago
13 minute ago
21 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
21 minute ago
57 minute ago