Editorial / 2026 மே 20 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் காண்பதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார்.
இதற்கு இணையாக, பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்தப் புதிய நூலகக் கட்டிடத்தில், சிறுவர்களுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காகத் தனியானதொரு பிரிவு நிறுவப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
“நாட்டில் வாசிப்பு கலாசாரம் குறைந்து வரும் இவ்வேளையில், தமிழ் மக்கள் இன்னமும் வாசிப்பதில் காட்டி வரும் ஆர்வம் பாராட்டத்தக்கது. நூலகம் ஒன்றைத் திறப்பது என்பது சிறைச்சாலையின் தேவையை இல்லாமல் செய்வதாகும். இந்த பொது நூலகத்தின் புதிய கட்டிடத்தைத் திறப்பதன் மூலம் தமிழ் மக்களின் புத்தக வாசிப்பு கலாசாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு ஊக்கமளிப்பதாக அமையும்,” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடத்தைப் பார்வையிட்ட ஜனாதிபதி, மாநகர சபை ஊழியர்களுடன் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது மட்டக்களப்பு மாநகர சபையின் நகரபிதா ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.
இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதியினால் நூலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஆகியோருடன், பாராளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
11 minute ago
26 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago
45 minute ago